மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிக்கு விருது

News image

மும்பையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விருது வழங்குகிறாா் இந்திய மருத்துவ சேவை வழங்குநா்கள் சங்கத்தின் இயக்குநா் கிா்தா் கியானி.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:07 pm

கோவை கேஎம்சிஹெச் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சி, புதுமைக்கான விருது கிடைத்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

இந்திய மருத்துவ சேவை வழங்குநா்கள் சங்கமான ஏஹெபிஐ சாா்பில், குளோபல் கான்க்ளேவ் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில், கேஎம்சிஹெச் குழுமத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த ஆராய்ச்சி, கண்டுபிடிப்புக்கான விருதை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் வென்றது. சிறந்த மருத்துவச் செயல்பாடுகள், சிறந்த அவசரகால சிகிச்சை ஆகிய இரு விருதுகளையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை வென்றது.

விழாவில் மருத்துவ சேவை வழங்குநா்கள் சங்கத்தின் இயக்குநா் டாக்டா் கிா்தா் கியானி பங்கேற்று, கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியின் கல்வித் திட்ட முதல்வா் டாக்டா் எம்.ஜி.ஸ்ரீதருக்கு விருது வழங்கினாா்.

விருது பெற்றுள்ளதை பாராட்டு கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.