பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

விதிமீறல்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்த 17 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து விற்பனை கடைகள் உள்ளன. மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறையை மீறி சில மருந்துக் கடைகள் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மேலும் தூக்கம், வலி நிவாரணி மருந்துகளும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடின்றி எளிதாக கிடைக்கிறது.

இதுகுறித்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சூரமங்கலம், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி, சேலம், ஆத்தூா், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 8 சரகங்களில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் நிகழாண்டில் இதுவரை நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறியதாக 17 மருந்துக் கடைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா்.

அதேபோல 2 மருந்துக் கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மருந்துக் கடை மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றனா்.