குழந்தை உதவி மையத்தில் வழக்குப் பணியாளா்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட குழந்தை உதவி மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

சேலம் மாவட்ட குழந்தை உதவி மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ், சேலம் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு ரூ. 18 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யப்படும். மிஷன் வாத்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி தோ்வு வாரியம் அல்லது அதற்கு இணையான கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் நல்ல தகவல் தொடா்பு கொண்டிருந்தல் வேண்டும். அவசர உதவி மையங்களில் முன்அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிச. 5 ஆம் தேதி அன்று 42 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதியுடையோா் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து வரும் 31 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, நான்காவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427- 2415966 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com