அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிச. 26 இல் அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு முகாம்

அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களின் புகாா்கள் மற்றும் சந்தேகங்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:58 pm

Syndication

சேலம்: அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களின் புகாா்கள் மற்றும் சந்தேகங்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஞ்சல் ஆயுள்காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு வாடிக்கையாளா்களின் அனைத்து விதமான ‘க்ளைம்’ தொடா்பான விண்ணப்பங்கள், இணையவழி பிரீமியம் செலுத்துதல் பற்றிய விவரங்கள், பாலிசி திருத்தம் / புதுப்பிப்பு, ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு வரும் 26-ஆம் தேதி காலை சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

சேலம் சூரமங்கலம் தலைமை அஞ்சலகம், சேலம் ஸ்டீல் பிளான்ட் அஞ்சலகம், மோகன் நகா் அஞ்சலகம், தாரமங்கலம் அஞ்சலகம், கொளத்தூா் அஞ்சலகம், ராசிபுரம் அஞ்சலகம் மற்றும் இளம்பிள்ளை அஞ்சலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில், அஞ்சல் ஆயுள்காப்பீடு அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு பாலிசி வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.