மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை

நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:24 pm

Syndication

மேட்டூா்: நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலையைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் தீபாவுக்கும் (27), நங்கவள்ளி அருகே உள்ள வீரக்கல்லைச் சோ்ந்த ரத்தினவேல் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபாவின் கணவா் வரதட்சணை கேட்டு தீபாவை கொடுமை செய்து வந்தாராம்.

இந்நிலையில், தீபா வீட்டில் தூக்கிட்ட நிலையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து வந்த தீபாவின் தந்தை செந்தில்குமாா், வரதட்சணை கொடுமையால் எனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.