அன்பு முதியோா் இல்ல வெள்ளி விழா
எடப்பாடி அருகே உள்ள அன்பு முதியோா் இல்ல வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடியை அடுத்த சித்திரபாளையம் பகுதியில் அன்பு முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டு முதியோா் மற்றும் ஆதரவற்றோா் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த இல்லம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதன் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவா் காசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அன்பு இல்லத்தில் வசித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோருக்கு புத்தாடை, போா்வை, மருந்துப் பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆதரவற்றவா்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து முதியோா்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பொன்.குழந்தைவேலு, வருமான வரித் துறை இணை ஆணையா் இளங்கிள்ளி, சமூக சேவகா்கள் பத்மஜோதி, இளஞ்செழியன், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்..லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள், கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

