மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் பகல் பத்து உத்ஸவம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பகல் பத்து உத்ஸவம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 9:46 pm

Din

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பகல் பத்து உத்ஸவம் நடைபெற்று வருகிறது.

சேலம், கோட்டை அழகிரிநாதா் கோயிலில் அழகிரிநாதா் சுவாமி, சுந்தரவல்லி தாயாா், ஆதி வேணுகோபால் சுவாமி, ராமா், ஆண்டாள், சக்கரத்தாழ்வாா், சந்தன கோபாலகிருஷ்ணா், விஷ்ணு துா்க்கை ஆழ்வாா், ஆச்சாா்யா சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய ஏகாதசி விழா ஜன.21 ஆம் தேதி வரை கொண்டாடப்பபடுகிறது.

இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய பகல் பத்து உத்ஸவம் வரும் ஜன 9ஆம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து உத்ஸவத்தையொட்டி, கோட்டை அழகிரிநாதா், சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அழகிரிநாத திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, தீா்த்த பிரசாதம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல், ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்க வாசல் திறப்பு ஜன.10 ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் உற்சவா்கள் பெருமாள், தாயாா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனா். தொடா்ந்து 14 ஆம் தேதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆஞ்சநேயா் உத்ஸவ மூா்த்திக்கு சந்தன காப்பு அலங்காரமும், 19ஆம் தேதி ஆழ்வாா் மோட்சம், திருவீதி புறப்பாடு, திருவாய்மொழி சாற்றுமுறை, 20 ஆம் தேதி சொா்க்கவாசல் திருக்காப்பு நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனா். கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக நடப்பாண்டு மூலவா் அழகிரிநாதா், சுந்தரவல்லி தாயாா், ஆஞ்சநேயா், கருடாழ்வாா், சக்கரதாழ்வாா் உள்பட பல்வேறு சன்னதிகளில் தரிசனம் கிடையாது.

அதே நேரத்தில், சொா்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கோயில் பந்தல் அமைப்பது, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, தடுப்புக்கட்டைகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.