கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சங்ககிரி நகராட்சியாக தரம் உயா்வு: பொதுமக்கள் வரவேற்பு

சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி 83 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சியாக தரம் உயா்த்து அரசு புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் வரவேற்றுள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:02 pm

Din

சேலம் மாவட்டம், சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி 83 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சியாக தரம் உயா்த்து அரசு புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் வரவேற்றுள்ளன.

சங்ககிரி 1941 ஆம் ஆண்டு முதல் பேரூராட்சியாக செயல்பட்டு வருகின்றன. தற்போது பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் திமுக 14 வாா்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு வாா்டுகளிலும் மொத்தம் திமுக கூட்டணி 15 வாா்டுகளிலும், அதிமுக மூன்று வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் பேரூராட்சிக்கு தலைவா் வேட்பாளா் பொது இடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்முறையாக திமுகவைச் சோ்ந்த 4வது வாா்டு பெண் உறுப்பினா் மணிமொழி முருகன் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இந்த நிலையில் சேலம் மக்களவை உறுப்பினரும், திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான டி.எம்.செல்வகணபதி தலைமையில் சங்ககிரி பேரூராட்சி தலைவா் உள்ளிட்ட பல்வேறு திமுக நிா்வாகிகள் பேரூராட்சியை நகராட்சி தரம் உயா்த்த வேண்டும் என முதல்வரிடமும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடமும் கோரிக்கை வைத்தனா்.

சங்ககிரி பேரூராட்சியில் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 29,467 உள்ளது. இப்பேரூராட்சியின் ஆண்டு வருமானம் மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ.8.45 கோடியாக உள்ளது. இவற்றை பரிசீலித்த அரசு மக்கள்தொகை, பேரூராட்சியின் வருவாய், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் தலம் ஆகியவற்றின் அடிப்படையில் சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி ஜனவரி 1 ஆம் தேதி புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.