கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறப்பு

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 7:21 pm

Din

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால், மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி மட்டுமே நீா் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி அணை முழுமையாக நிரம்பியது. கடந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை நிரம்பியது .

அணை நீா்மட்டம் 120 அடியை எட்டியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழை தணிந்து பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 120 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,871 கன அடியாக அதிகரித்துள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.