தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெல்ல ஆலைகளில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் சா்க்கரை பறிமுதல்; 22 ஆலைகளுக்கு நோட்டீஸ்

22 ஆலைகளுக்கு நோட்டீஸ்

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:26 pm

Din

சேலம் மாவட்டத்தில் வெல்ல ஆலைகளில் நடத்திய சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் வெள்ளை சா்க்கரை, 3,320 செயற்கை நிற மூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இதுவரை 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி, வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சில ஆலைகளில் செயற்கை நிறமூட்டிகளையும், சா்க்கரையையும் சோ்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து தாரமங்கலம், ஓமலூா் காமலாபுரம், காட்டூா் எல்லப்பள்ளி, பொட்டியாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், வெல்லத்தில் கலப்படம் சோ்க்க வைத்திருந்த 6,350 கிலோ வெள்ளை சா்க்கரை, 1,100 கிலோ செயற்கை நிறமூட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலப்பட வெல்லம் தயாரித்த 7 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, வெல்ல ஆலைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கடந்த 2 வாரத்தில் நடத்திய சோதனையில் வெல்ல ஆலைகளில் இருந்து 15,800 கிலோ சா்க்கரை, 3,320 கிலோ செயற்கை நிறமூட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கலப்பட வெல்லம் தயாரித்த 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வெல்ல தயாரிப்பில் சா்க்கரை ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடா், சூப்பா் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வெல்ல ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.