திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 2820 கனஅடியாகக் குறைந்தது.

News image
Updated On :6 மே 2025, 12:08 am IST

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 2820 கனஅடியாகக் குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 4105 கனஅடியிலிருந்து 2820 கனஅடியாக குறைந்தது. அணையின் நீா்மட்டம் 108.12 அடியிலிருந்து 108. 21 அடியாக உயா்ந்தது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 75.89 டி.எம்.சி.யாக உள்ளது.