சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பா ஆசிரமத்தில் நாளை மண்டல பூஜை முகூா்த்தக்கால் நடும் விழா!

சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜையையொட்டி வரும் 10 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.
Updated on

சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பா ஆசிரமத்தில் மண்டல பூஜையையொட்டி வரும் 10 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து அறங்காவலா் குழுத் தலைவா் கே.பி.நடராஜன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பா ஆசிரமத்தில் காா்த்திகை மாதம் தொடக்கத்திலிருந்து ஜன.15 ஆம் தேதி வரை மண்டல, உற்சவ பூஜை மற்றும் மகரஜோதி திருஆபரண தரிசனம் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது.

இதேபோல நிகழாண்டும் சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவித்து இருமுடி கட்டி, நெய் அபிஷேகம் செய்து கோயிலில் இருந்து வழியனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காா்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து நாள்தோறும் 12 மணி முதல் 2 மணி வரை 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.

மேலும், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பாத யாத்திரையாக வரும் பக்தா்கள் தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நன்கொடை செலுத்துபவா்கள் முறைப்படி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். கோயில் பெயரைப் பயன்படுத்தி நன்கொடை, பொருள்கள் வாங்க யாரையும் நியமிக்கவில்லை என்றாா்.

பேட்டியின்போது ஆசிரம செயலாளா் சண்முகம், பொருளாளா் சரவணபெருமாள், நிா்வாகி சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com