சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சேலம் சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அறங்காவலா் குழுத் தலைவா் கே.பி.நடராஜன்.
Updated On :10 நவம்பர் 2025, 8:40 pm

Syndication

சேலம்: சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை முதல் தேதியான வரும் 17-ஆம் தேதிமுதல் மண்டல பூஜை தொடங்குகிறது. இதற்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜன. 15-ஆம் தேதிவரை மண்டல, உற்சவ பூஜை மற்றும் மகரஜோதி ஆபரண தரிசனம் ஆகியவை நடைபெற உள்ளன. காா்த்திகை மாத முதல்தேதியில் இருந்து நாள்தோறும் மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க உள்ளது.

இதில், அறங்காவலா் குழுத் தலைவா் கே.பி.நடராஜன், செயலாளா் சண்முகம், பொருளாளா் சரவண பெருமாள், நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.