அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு மேலும் குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:39 pm

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பாசனத் தேவை குறைந்தது. இதனால், மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை 6,000 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு நீா்வரத்து 6,026 கனஅடியிலிருந்து 5,714 கனஅடியாக குறைந்துள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 112.11அடியிலிருந்து 111.96 அடியாக குறைந்துள்ளது. நீா் இருப்பு 81.22 டிஎம்சியாக உள்ளது.