ஏற்காடு ரோஜா தோட்டம் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்
ஏற்காடு ரோஜா தோட்டம் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: வெறிச்சோடிய சுற்றுலாத் தலம்

ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியதால் சுற்றுலாப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
Published on

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியதால் சுற்றுலாப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் பகுதிகள் பனிமூட்டத்தால் அழகாக காணப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடிசீட் பகுதிகளில் சாலையோரக் கடைகள் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தன.

ஏற்காடு  ஒண்டிக்கடை பகுதியில்  முகப்பு விளக்களை ஒளிரவிட்டப்படி சென்ற  சென்ற வாகன ஓட்டிகள்
ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் முகப்பு விளக்களை ஒளிரவிட்டப்படி சென்ற சென்ற வாகன ஓட்டிகள்

பேருந்துகள், வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. நாள் முழுவதும் பனிமூட்டமும் கடும் குளிரும் நிலவியது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்களை ஒளிரவிட்டு செல்வதைக் காணமுடிந்தது.

X
Dinamani
www.dinamani.com