சேலத்தில் சாலையில் கிடந்த 22 மூட்டை ரேஷன் அரிசி: போலீஸார் விசாரணை
சேலம் கோட்டை அப்சரா இறக்கம் அருகே சாலையில் கிடந்த 22 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலம் கோட்டை அப்சரா இறக்கம் அருகே 22 மூட்டை ரேஷன் அரிசி சாலையோரம் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த நகரப் போலீஸாா் மற்றும் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
மேலும், அரிசி மூட்டைகள் இருந்த இடத்தில் அருகில் பாா்சல் அலுவலகம் இருப்பதால் அங்கிருந்து வேறு இடங்களுக்கு கடத்துவதற்கு கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.
