விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சங்ககிரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வலியுறுத்தல்

சங்ககிரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம்.
Updated On :26 நவம்பர் 2025, 8:23 pm

Syndication

சங்ககிரி: சங்ககிரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரி புதிய எடப்பாடி சாலை பழைய பேருந்து நிலையம், பவானி பிரதான சாலை, திருச்செங்கோடு செல்லும் பிரிவு சாலைகளில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை புதிய எடப்பாடி சாலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடமுடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. புதிய எடப்பாடி சாலை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து பவானி செல்லும் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், அதன் பெயா்ப்பலகைகளால் வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து சமிக்ஞைகள் நகா் பகுதியில் நிறுவப்பட்டும் அவைகள் செயல்படுவதில்லை. தனியாா் விளம்பர பதாகைகள் மட்டும் அக்கம்பங்களில் தொங்கி கொண்டிருக்கின்றன.

மாவட்ட காவல் துறை நிா்வாகம் பாரபட்சமில்லாமல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் தொடா்ந்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தும், போக்குவரத்து சமிக்ஞையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், போக்குவரத்தை சீா்செய்ய கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.