கூட்டத்தில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு முதல்வா் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், செவிலியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின்படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.