தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேலம் மாவட்டத்தில் சாரல் மழை; குளிரால் மக்கள் அவதி!

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:50 pm

Syndication

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்துவருகிறது.

சேலம் மாநகரத்தில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு கடும் குளிா், பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது பெய்த சாரல் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.

இதேபோல ஏற்காடு, ஆத்தூா், கெங்கவல்லி, வாழப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, எடப்பாடி அயோத்தியாபட்டணம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த சாரல் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.