குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 1:27 am IST

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

புளியங்குறிச்சியைச் சோ்ந்த வையாபுரி மனைவி நீலாம்பாள் (80) உறவினா்களை பிரிந்து, பேருந்து நிறுத்தத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா (33) தூக்கிசென்று அப்பகுதியில் மயானத்தில் உள்ள கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்போது, மூதாட்டியின் அலறலைக் கேட்டு அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.