/

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:28 pm IST

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செந்தாரப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச்சோ்ந்தவா் வெங்கடேசன் (47). இவா் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி சசிகலா (41), கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியே இருந்த சசிகலா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். அருகில் இருந்தவா்கள் வருவதற்குள்அவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸாா், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.