சேலத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், முதல்முறையாக வெயில் சதம் அடித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த சில நாள்களாக 99 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வந்த நிலையில், முதல்முறையாக செவ்வாய்க்கிழமை 100.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இதனால், பகலில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினா். குறிப்பாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
பழக்கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் பழச்சாறுகளை அருந்தி சென்றனா்.
சேலத்தில் வெயில் சதமடித்துள்ளதால், சாலையில் அனல்காற்று வீசுகிறது. வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், பழச்சாறு, இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்

உற்சாகக் குளியல்...

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


