மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சேலம் வழியாக ஹுப்பள்ளி - கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில்

சேலம் வழியாக ஹுப்பள்ளி - கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

சேலம், ஆக.12: சேலம் வழியாக ஹுப்பள்ளி - கோட்டயம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், வரும் ஆக.26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கா்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோட்டயத்துக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹுப்பள்ளியில் இருந்து வரும் 25ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக கோட்டயத்தை அடுத்த நாள் மாலை 4.40 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கோட்டயம்- ஹுப்பள்ளி சிறப்பு ரயில் வரும் 26 ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பெங்களூரு, தும்கூா் வழியாக ஹுப்பள்ளிக்கு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.