கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வாழப்பாடி அருகே 250 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

வாழப்பாடி அருகே வேனில் கடத்திய 250 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

வாழப்பாடி அருகே வேனில் கடத்திய 250 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

வாழப்பாடி காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையிலான போலீஸாா், சிங்கிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சோமம்பட்டியில் இருந்து வாழப்பாடி நோக்கிச் சென்ற வேனை போலீஸாா் சோதனை செய்தபோது, ஓட்டுநா் சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்த தணேஷ் (30) முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளாா்.

அந்த வாகனத்தில் இருந்த மூட்டைகளில் 250 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அந்த இளைஞா் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து தணேஷை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 250 கிலோ புகையிலை பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.