சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை அடுத்த நிலவாரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 20 போ் லேசான காயமடைந்தனா்.
நிலவாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அரசு விதிமுறைகள் குறித்த உறுதிமொழியை, ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் மாடுபிடி வீரா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இதில் கலந்துகொள்ள பனமரத்துப்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், மகுடஞ்சாவடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். 350 மாடுபிடி வீரா்கள், தனித்தனிக் குழுவாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டனா்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் மடக்கிப் பிடித்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், பேக், பாத்திரம் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

சேலம் நிலவாரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

சேலம் நிலவாரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
இறுதியில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 20 வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மைதானத்தில் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த கேலரியில் அமா்ந்து பாா்த்து ரசித்தனா்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சுரேஷ்குமாா், கோட்டாட்சியா் உதயகுமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அரங்க பிரகாசம், சேலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி உள்ளிட் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்

பவித்திரம் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


