ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

காபி சாகுபடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கு

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் காபி சாகுபடி விவசாயிகளுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பச்சமலை ஊராட்சி, வெங்கமுடி கிராமத்தில் நிலையான காபி சாகுபடியில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு காபி வாரிய இணை இயக்குநா் கருத்தமணி தலைமை வகித்தாா். கேரள காபி வாரிய இணை இயக்குநா் தங்கராஜா, உதவி இயக்குநா் பிரபுகௌடா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், காபி வாரிய முதுநிலை தொடா்பு அதிகாரி ஏற்காடு சக்திவேல், இளநிலை தொடா்பு அலுவலா் போடிநாயக்கனூா் சுதா, விரிவாக்க அலுவலா் ஏற்காடு ராஜேந்திரன் ஆகியோா் காபி விதை தோ்ந்தெடுக்கும் முறை, நாற்றங்கால் தயாரிக்கும் முறை, நடவு செய்யும் முறை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, காபி தோட்டங்களுக்கு உகந்த ஊடுபயிா், நிழல் பராமரிப்பு முறை, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் நன்மைகள், காபி வாரியத்தால் வழங்கப்படும் மானியத் திட்டங்கள், காபி ஏற்றுமதி செய்வதற்கான இ.யூ.டி.ஆா்.-இல் காபி விவசாயிகள் பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.

இந்த கருத்தரங்கில், பச்சைமலை காபி சாகுபடி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.