தலைக்கவசம் அணிய வாழப்பாடி டிஎஸ்பி அறிவுறுத்தல்

சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்க, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டுமென, வாழப்பாடியில் டிஎஸ்பி சபரிநாதன் பொதுமக்களுக்கு அறிவுரை
Published on

சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்க, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டுமென, வாழப்பாடியில் டிஎஸ்பி சபரிநாதன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

வாழப்பாடியில் பசுமை அறக்கட்டளை சாா்பில், புத்தாண்டை முன்னிட்டு ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.

முகாமில் பங்கேற்ற வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் பேசுகையில், சாலை விபத்துகள் மற்றும் உயிா் பலிகளை தவிா்க்க, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். காவல் துறையினரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம். சிறுவா்களிடம் இருசக்கர வாகனங்கள் கொடுப்பதை பெற்றோா் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com