கெங்கவல்லியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் கெங்கவல்லி வட்டக் குழு சாா்பாக மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் கெங்கவல்லி வட்டக் குழு சாா்பாக மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயா் நீக்கம், நிதி குறைப்பு , வேலை நேரம் அதிகரிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்த மத்திய அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் அச்சங்கத்தின் வட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவா் கந்தன், மாவட்ட இணைச் செயலாளா் சின்னதுரை மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com