சேலம்
‘புகையில்லா போகி’: ஆத்தூா் நகராட்சி வேண்டுகோள்
பழைய பொருள்களை எரித்தும், சாலையோரங்களில் வீசியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பழைய பொருள்களை எரித்தும், சாலையோரங்களில் வீசியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ. சையத் முஸ்தபா கமால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளை சுத்தம் செய்யும்போது தேவையற்ற பொருள்களை தெரு ஓரங்களில் வீசக் கூடாது. அதேபோல பழைய பொருள்களை எரிக்கக் கூடாது.
குப்பைகளை சேகரிக்க வரும் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நகராட்சியின் சிறப்பு வாகங்கள் இயக்கப்படுகின்றன. அதில் பழைய பொருள்களை ஒப்படைத்து புகையில்லா போகியை கொண்டாட வேண்டும்.
மேலும், ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வரும் 14 ஆம் தேதி சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.