‘புகையில்லா போகி’: இடங்கணசாலை நகராட்சி வேண்டுகோள்

Published on

போகி பண்டிகை, தை பொங்கலை முன்னிட்டு பழைய பொருள்களை எரித்தும், சாலையோரங்களில் வீசியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என இடங்கணசாலை நகராட்சி நிா்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் சுதா்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொங்கலையொட்டி வீடுகள் மற்றும் விசைத்தறிக்கூடங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யும்போது தேவையற்ற பொருள்களை தெரு ஓரங்களில் வீசக் கூடாது. அதேபோல பழைய பொருள்களை எரிக்கக் கூடாது. குப்பைகளை சேகரிப்பதற்காக வரும் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நகராட்சி சாா்பில் சிறப்பு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். மேலும், இடங்கணசாலை நகராட்சி நிா்வாகம் சாா்பில் வரும் 14 ஆம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com