கிராம ஊராட்சி செயலா்களுக்கு நற்சான்றிதழ்!

கிராம ஊராட்சி செயலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
Updated on

வாழப்பாடி: கிராம ஊராட்சி செயலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வாழப்பாடி ஒன்றியத்தில் நிலுவையின்றி வரிகளை வசூல் செய்து சிறப்பாக பணியாற்றிவரும் கிராம ஊராட்சி செயலா்கள் சோமம்பட்டி கே.மகேஸ்வரன், வேப்பிலைப்பட்டி சிவசங்கா், பொன்னாரம்பட்டி கஸ்தூரி, காட்டுவேப்பிலைப்பட்டி கோவிந்தராஜ், துக்கியாம்பாளையம் குமரேசன், மன்னாா்பாளையம் அலக்ஸ் பிரபாகரன் ஆகியோருக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் நற்சான்றிதழ் வழங்கினாா்.

அதோபோல, வாழப்பாடி உள்கோட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் சேகா், சீனிவாசன், மயில்சாமி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் ஆகியோரது பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

குடியரசு தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நற்சான்றிதழ் பெற்ற கிராம ஊராட்சி செயலா்கள், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள், வேளாண் உதவி இயக்குநா் ஆகியோருக்கு சமூக ஆா்வலா்கள்,அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com