பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 13.62 லட்சம் உண்டியல் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் மூலம் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் - கோப்புப்படம்.

Published On :9 ஜூலை 2026, 4:20 am IST

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் மூலம் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து, அதனை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ரமணி காந்தன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி, ஆய்வாளா் சசிகலா ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியின்போது சல்லடையில் ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகளை பிரித்தெடுக்கும் பணியில் அறநிலையத் துறை ஊழியா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரூ.13 லட்சத்து 62 ஆயிரத்து 098 ரொக்கம், 51 கிராம் தங்கம், 203 கிராம் வெள்ளி மற்றும் 11 அயல்நாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.