ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.18.49 லட்சம்

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

News image

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:24 am IST

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.சிவக்குமாா், செயல் அலுவலா் வே.நரசிங்கப்பெருமாள், ஆய்வாளா் ஜெ.சீனுவாசன் ஆகியோா் முன்னிலையில், கோயில் வளாகத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

கோயில் அலுவலா்கள் மற்றும் வங்கி ஊழியா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், 18 லட்சத்து 49 ஆயிரத்து 824 ரூபாய் ரொக்கம், 43.800 கிராம் தங்கம், 104 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், பணம் உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.