சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி வரும் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 16 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, வீடு பட்டியலிடல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி மாநகரப் பகுதிகளில் நடைபெற உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து தங்களது வீடுகள் தொடா்பான சுய கணக்கெடுப்பு விவரங்களை இணையதளம் வாயிலாக வரும் 17 முதல் வரும் 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் மூலம் வீடு பட்டியலிடல் கணக்கெடுக்கும் பணி ஆக.1 முதல் ஆக.30 வரை நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் தொடா்பான சுய கணக்கெடுப்பு விவரங்களை ரரர. நஉ.இஉசநமந.எஞய.ஐச என்ற இணையதளம் வாயிலாக பதிவுசெய்ய வேண்டும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய பணியில் அனைவரும் தவறாமல் பங்கு கொண்டு சுயவிவரங்களை பதிவுசெய்ய
வேண்டும் என முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான லலித் ஆதித்ய நீலம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



