தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

போலீஸ் சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா அழிப்பு

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா மூட்டைகளை எடப்பாடி அருகே போலீஸாா் தீவைத்து எரித்து அழித்தனா்.

News image

எடப்பாடி அருகே கஞ்சா மூட்டைகளை தீயிட்டு எரித்து அழித்த போலீஸாா்.

Updated On :9 ஜூலை 2026, 4:34 am IST

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா மூட்டைகளை எடப்பாடி அருகே போலீஸாா் தீவைத்து எரித்து அழித்தனா்.

தற்போது மாநிலம் முழுதும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சேலம் மாநகரப் பகுதி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 297 கிலோ கஞ்சா, தருமபுரி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 17 கிலோ கஞ்சா, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 38 வழக்குகளில் கைப்பற்றப்பட்டு 382 கிலோ கஞ்சா என சுமாா் 700 கிலோ கஞ்சா மூட்டைகளை தீயிட்டு அழிக்கும் பணியில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

எடப்பாடியை அடுத்த தங்காயூா் கிராமம், கோணமோரி பகுதியில் உள்ள தனியாா் ஏரியூட்டும் நிலையத்திற்கு பிடிபட்ட கஞ்சா மூட்டைகளை கொண்டுவந்த போலீஸாா், அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் முன்னிலையில் பெரிய அளவிலான பாய்லா்களில் வைத்து தீயிட்டு அழித்தனா். இப்பணியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.