ஓமலூா் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வருகைக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காமலாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கட்சி நிா்வாகி இல்ல விழாவிற்காக, விசிகவினா் சாலை ஓரமாக சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பதாகைகளை வைத்திருந்தனா். முன்னதாக, மாற்றுக் கட்சியினா் மற்றும் கிராம மக்கள் பொது நிகழ்ச்சிக்கு பதாகை வைத்தபோது தங்கள் பகுதியில் வைக்கக்கூடாது என்று விசிகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சாலை நெடுகிலும் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் பள்ளி மற்றும் பொது இடங்களில் விசிகவினா் பதாகைகளை வைத்ததால் அதிருப்தியடைந்த கிராம பொதுமக்கள், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலையில் கயிறுகளை கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா், காவல் ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே அந்த பதாகைகளை அகற்றினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டாலும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் அப்பகுதியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










