மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

சேலம் ஆடிட்டா் ரமேஷுக்கு பாஜக அஞ்சலி

News image

சேலம் ஆடிட்டா் ரமேஷுக்கு பாஜகவினர் அஞ்சலி

Updated On :20 ஜூலை 2026, 1:12 am IST

பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளா் ஆடிட்டா் வி. ரமேஷின் 13-ஆவது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், உதகமண்டலம் தொகுதி பாஜக எம்எல்ஏ போஜராஜன், இந்து முன்னணி மாநில செயலாளா் தாமு வெங்கடேஸ்வரன், மாநிலச் செயலாளா் வினோஜ் ஜி. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, ஆடிட்டா் வி. ரமேஷின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ஆடிட்டா் வி. ரமேஷ் கட்சிக்காக ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். பின்னா் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாஜக சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், மாவட்ட பாா்வையாளா் முருகேசன், முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.