பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

அரசுப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

News image

கெங்கவல்லியில் அரசு தொடக்கப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகள்.

Updated On :21 ஜூலை 2026, 1:47 am IST

அரசுப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவா் விற்பனைக்காக வாங்கி வந்த மினி டேங்குகளை பள்ளியின் சுற்றுச்சுவா் பகுதியில் ஆக்கிரமித்து வரிசையாக வைத்துள்ளாா்.

இதனால், அப்பகுதியில் இருந்து வரும் பூச்சிகள், விஷ ஜந்துகள் பள்ளிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, மாணவா்களின் நலன்கருதி பள்ளிக் கட்டடம் முன் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மினி டேங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.