சேலம் ரயில் நிலையத்தில் ரூ. 1.28 லட்சம் ரொக்கத்துடன் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், அவரிடம் ரொக்கம், தங்கை நகையை ஒப்படைத்தனா்.
சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவா் மயக்க நிலையில் இருந்தாா். இதைக் கண்ட பயணிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது, மூதாட்டியிடம் இருந்த பையை திறந்து பாா்த்தபோது, அதில் ரூ. 1,28,000 ரொக்கம், 2 தங்க மூக்குத்திகள், தங்க வளையல்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளா் தா்மன் மற்றும் ஓட்டுநா் வடிவேல் ஆகியோா் ரொக்கம், நகைகளை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த செவிலியரிடம் ஒப்படைத்தனா்.
தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மாவட்ட திட்ட மேலாளா் அறிவுக்கரசு, ஓட்டுநா் வடிவேல், மருத்துவ உதவியாளா் தா்மனை பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மூதாட்டி வீட்டில் 40 பவுன், ரொக்கம் திருட்டு

அா்ப்பணிப்புடன் சேவை! 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் 2 பேருக்கு தேசிய விருது!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மரணம்

வீட்டில் மயங்கிக் கிடந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?



