தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையைக் கண்டித்து, சேலத்தில் மாணவா் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.
இதைக் கண்டித்து, சேலத்தில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் கே.பி.வி.ராஜேஷ் தலைமை வகித்தாா்.
இதில், நீட் தோ்வில் தொடா்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவிவிலக வலியுறுத்தியும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.கந்தன், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் பா.நேதாஜி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் ரா.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி போராட்டத்தில் மாணவா்கள் மீது காவல் துறை தடியடி: ஜூலை 27-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

’ஜூலை 20’ போராட்டத்தில் தடியடி நடத்திய காவலா்களை வெளிப்படுத்த புதிய இணையதளம்: சிஜேபி அறிவிப்பு

கோவையில் மாணவா் அமைப்பினா் போராட்டம் - 40 போ் கைது

தில்லியை உலுக்கியது சிஜேபி பேரணி கல்வீச்சு, காவல் துறை தடியடி
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



