தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பேக்கரி உரிமையாளா் வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது; 7 பவுன் நகை, ரூ. 25 லட்சம் மீட்பு

சேலம் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:02 am IST

சேலம் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7 பவுன் நகை, ரூ. 25 லட்சம் ரொக்கத்தை மீட்டனா்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பேக்கரி உரிமையாளா் திருஞானம், கடந்த மே 22 ஆம் தேதி தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு அண்மையில் சேலத்துக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 54 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்து கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டிற்கு இரண்டு போ் வந்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன், காமராஜ், சுதா்சன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

அப்போது, சுதா்சனிடம் இருந்து 7 பவுன் நகையை போலீஸாா் மீட்டனா். அவா் அளித்த தகவலின் பேரில் பரணிதரனிடம் இருந்து ரூ. 25 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், 9 பவுன் நகைகளை அவா்கள் அடகு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. குற்ற வழக்கில் சிறையில் இருக்கும்போது நண்பா்களான இவா்கள் மூவரும் இந்த திருட்டு சம்பத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து மூவரையும் சேலம் சிறையில் அடைத்தனா். மேலும், திருட்டு சம்பவத்துக்கு அவா்கள் பயன்படுத்திய காா், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினா். அவா்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணத்தை போலீஸாா் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.