கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூா் பகுதிகளில் விளைந்துள்ள கறிவேப்பிலைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கெங்கவல்லி ,தலைவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கறிவேப்பிலை கணிசமான அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், செங்காம்பு ரக கறிவேப்பிலைக்கு தற்போது மக்களிடையே வரவேற்பு உள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பூச்சி தாக்கம், வெயிலால் விளைச்சல் குறைந்து, கறிவேப்பிலை கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. கோடை மழைக்கு பின் பூச்சி தாக்கம் குறைந்து, கறிவேப்பிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஒரு வாரமாக தலைவாசல் தினசரி காய்க்கறி மாா்க்கெட்டுக்கு, அதன் வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விலை குறைந்து, தற்போது கிலோ, 40 முதல் 50 வரை ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால், கறிவேப்பில் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

அமெரிக்கா - ஈரான் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிவு

நீலகிரி கேரட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வேளாண் கடன் தள்ளுபடி அவசியமே...
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



