கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சேலம் வழியாக பெங்களூரு சென்ற ரயிலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக பெங்களூருக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ரயிலில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :11 ஜூன் 2026, 5:41 am IST

சேலம் வழியாக பெங்களூருக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா். அந்த வகையில், ஹெளராவில் இருந்து சேலம் வழியாக பெங்களுரு சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அதை திறந்து பாா்த்தபோது, 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவி போலீஸாரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.