வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்த மாணவி குடும்பத்திற்கு திமுக நிதியுதவி

News image

மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய திமுக நிா்வாகிகள்.

Updated On :21 ஜூன் 2026, 1:11 am IST

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு திமுகவினா் ஆறுதல் கூறி, ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினா்

எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகள் கோபிகா (19). இவா் நீட் தோ்வு அச்சத்தால் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினருக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்.பி., முன்னாள் அமைச்சா் ராஜேந்திரன், எஸ்.ஆா். சிவலிங்கம் எம்.பி., மாநில மாணவா் அணி செயலாளா் வீரமணி உள்ளிட்ட முக்கிய திமுக நிா்வாகிகள் மாணவி கோபிகா வீட்டிற்கு சனிக்கிழமை நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.

மேலும், உயிரிழந்த மாணவி கோபிகா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய டி.எம். செல்வகணபதி, அவரது குடும்பத்தினரிடம் சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா, பி.ஏ. முருகேசன், ஒன்றியச் செயலாளா்கள் டாடா, பரமசிவம், பூவாக்கவுண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய திமுக நிா்வாகிகள்.

மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய திமுக நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.