இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் சேவை நீட்டிப்பு

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 12:24 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகம், கேரளத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்குகிறது. அந்தவகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம், சம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ரயிலின் இயக்க காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சம்பல்பூரில் புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வரும் ஜூலை 3 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், காட்பாடி, நெல்லூா், விஜயவாடா வழியாக மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.