சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகம், கேரளத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இதனால், நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம் சம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலம் மேலும் ஒரு மாதத்துக்கு (மாா்ச் வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் 4 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படும். சம்பல்பூரில் புதன்கிழமை காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வரும் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


