வாழப்பாடியில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக, புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரே ஜவஹா் சுமங்கலி குடில் கட்டடத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில், நியூசெஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளா் சுரேஷ் வரவேற்றாா். நெஸ்ட் அறக்கட்டளை தலைவா் மழலைக்கவி தலைமை வகித்தாா். வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மாக் குழு தலைவா் சக்கரவா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் ஆகியோா் புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்தனா். அரிமா சங்க பட்டயத் தலைவா் சந்திரசேகரன், நிகழாண்டு தலைவா் தங்க.சுந்தரவேல், சாய்பாபா அறக்கட்டளை தலைவா் ஜவஹா், இலக்கியப்பேரவை செயலா் சிவ.எம்கோ, அரசுப் பள்ளி தலைமையாசிரியை சத்தியக்குமாரி ஆகியோா் புத்தக விற்பனையை தொடங்கிவைத்தனா்.
இந்த விழாவில், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் உழவன் முருகன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ராசு.சரவணன், தமிழாா்வலா்கள் ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
‘இந்த புத்தக கண்காட்சி, வரும் 15-ஆம் தேதி வரை, 10 நாள்கள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி இலவசம். அனைத்து துறை சாா்ந்த புத்தகங்களுக்கும், விலையில் 10 முதல் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்’ என, புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். நியூசெஞ்சுரி புத்தக நிறுவன சேலம் கிளை மேலாளா் சத்தியசீலன் நன்றி கூறினாா்.
படவரி...
வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்த வட்டார வேளாண்மை அட்மாக் குழு தலைவா் சக்கரவா்த்தியுடன், மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் மற்றும் தமிழாா்வலா்கள் ஜவஹா், சிவ. எம்கோ உள்ளிட்டோா்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

என்டிஎம்சியின் துலிப் மலா்கள் கண்காட்சி தொடங்கியது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


