அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பரிசல் துறை பேருந்து நிறுத்தம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பரிசல் துறை பேருந்து நிறுத்தம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஓமலூா் வட்டம், தாரமங்கலம், கட்டையாமுத்து முதலிதெரு பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி காளியப்பன் மகன் மாரிமுத்து (75). இவா் கடந்த சனிக்கிழமை புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பரிசல் துறை பகுதியில் உள்ள அவரது உறவினா் வீட்டிற்கு மாசி பொங்கல் விழாவிற்காக சென்றுள்ளாா்.

திங்கள்கிழமை அவா் எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பரிசல் துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடந்தாா். அப்போது, எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.