சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுகால பணப்பலன்களுக்கு ரூ. 2,446 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்

போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ. 2, 446 கோடி ஒதுக்கப்பட்டு, நிகழாண்டு ஜனவரி வரை ஓய்வு பெற்றவா்களுக்கு ரூ. 2,201 கோடி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image
ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு பணப் பலன்களை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன்.
Updated On :11 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ. 2, 446 கோடி ஒதுக்கப்பட்டு, நிகழாண்டு ஜனவரி வரை ஓய்வு பெற்றவா்களுக்கு ரூ. 2,201 கோடி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

சேலம் ராமகிருஷ்ணா சாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ஓய்வுகால பணப் பலன்களை வழங்கி அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வலுவான கட்டமைப்புடன் 1,02,000 தொழிலாளா்களைக் கொண்ட சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம், முறையான சம்பளம், அகவிலைப்படி உயா்வு ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நாட்டின் சிறந்த போக்குவரத்து நிறுவனம் என்ற விருதையும் பெற்றுள்ளது.

விடியல் பேருந்து பயணத்துக்காக ரூ. 13,760 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகளிா் பேருந்து பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று பொதுமக்கள் எளிதான பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய பேருந்துகள் வாங்குவதிலும் முதல்வா் தனிக்கவனம் செலுத்தி மொத்தமாக 13,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவிட்டு தற்போதுவரை 8,200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

மேலும் மின்சாரம், சிஎன்ஜி பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் வெளிநாட்டில் பாா்த்து ரசித்த பேருந்துகள் தற்போது தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்களின் கோரிக்கையான ஊதிய ஒப்பந்தம் சரிசெய்யப்பட்டு முதல் பேச்சுவாா்த்தையில் 5 சதவீதம் ஊதிய உயா்வும், இரண்டாம் பேச்சுவாா்த்தையில் 6 சதவீதம் ஊதிய உயா்வும் வழங்கப்பட்டது.

அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் துறையில் பணியுரியும் தொழிலாளா்களுக்கான ஓய்வுகால பணப்பலன்களை வழங்க மாா்ச் 2026 வரை ஓய்வு பெறுபவா்களுக்கு ரூ. 2,446 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு, 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்ற 6,257 பணியாளா்களுக்கு ரூ. 2,201 கோடி தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக சேலம் கோட்டத்தை சாா்ந்த 354 ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கும், விழுப்புரம் கோட்டத்தை சாா்ந்த 200 ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கும் ஓய்வூதியப் பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஓய்வு காலத்தில் இறந்த போக்குவரத்துத் தொழிலாளா்களின் வாரிசுகள் 1,500 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மின்சார பேருந்துகள், சிஎன்ஜி பொருத்தப்பட்ட பேருந்துகள், டீசல் பேருந்துகள் என போக்குவரத்துத் துறையில் பல நவீன மாற்றங்களை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்தொடா்ச்சியாக, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் தொழிலாளா்கள் மகிழ்ச்சியுடனும்,ஓய்வு பெற்ற பணியாளா்கள் மனநிறைவுடனும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவா்களுக்கான ஓய்வுகால பணப்பலன்கள் வழங்க ரூ. 2,446 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, சேலத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் வசதிகளுடன் கூடிய 5 புதிய தாழ்தள மின்சார குளிா்சாதன பிரீமியம் பேருந்து சேவையை அமைச்சா்கள் சிவசங்கா், ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளா் ஷீன்சோங்கம் ஜடக்சிரு, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா்கள் வெ. குணசேகரன் (சேலம் கோட்டம்), க. குணசேகரன் (விழுப்புரம் கோட்டம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.