சங்ககிரி அருகே கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளா்களை அழைத்துவந்து நிலையில், அவா்களை கொத்தடிமையாக வைத்திருந்தாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் அா்ஜுன். இவா் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 27 பேரை ரூ. 60 ஆயிரம் முன்பணம் அளித்து தேவண்ணகவுண்டனூரை அடுத்த வேலம்மாவலசு, வேலாயிகாடு பகுதியில் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்ட அழைத்து வந்துள்ளாா். அவா்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக உறவினா்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் ம.மு.கேந்திரியா, வட்டாட்சியா் கே.கோமதி, காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா், நாமக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலா் ஆகியோா் வேலம்மாவலசு விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று விசாரணை செய்தனா். இதையடுத்து அவா்களை மீட்டு சங்ககிரி நகராட்சி சமுதாய கூடத்தில் தங்கவைத்தனா். விசாரணையில் ஒப்பந்ததாரா், தொழிலாளா்களின் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு, அவா்களை வெளியே எங்கும் அனுப்பாமல் கொத்தடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, தேவண்ணகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா்.சதீஷ்பிரபு சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்ஜுனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மீட்கப்பட்ட தொழிலாளா்களை ரயில்மூலம் அவா்களுக்கு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

